1. தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார் ? அ)பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2.வேர்க்கடலை ,மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை. ஆ) மணி வகை 3."கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது" இத்தொடர் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ஈ) பாடல்; கேட்டவர் 4.'விருந்தினரை பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டு சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான்' என்கிறது புறநானூறு இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை ஆ)இன்மையிலும் விருந்து 5.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடும் மென்பொருள் எது இ) இலா 6.மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது 7.இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் யார்? இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் யார்? ஈ) மன்னன் இறைவன் 8."இங்கு நகரப் பேருந்து நிற்குமா?" என்று வழிப்போக்கர் கேட்பது எவ்வகை வினா ? "அதோ அங்கே நிற்கும்" என்று மற்றொருவர் கூறுவது எவ்வகை விடை இ) அறியா வினா, ச...
அனைவருக்கும் வணக்கம் நான் இன்று பிளாகர் தளத்தில் காலடி வைத்திருக்கிறேன் . நான் இந்த தளத்தில் தமிழ் இலக்கணம் , இலக்கியம்,கதை , கட்டுரை,பாடல் சார்ந்த செய்திகளைத் சுவையாகவும், எளிமையாகவும் தர முயற்சிக்கிறேன்.